தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர் தந்தை ஜி. வெங்கடேஷ் தாய் ஏ.ஆர். ரெய்ஹானா ஒரு பின்னணிப் பாடகி. இவர் தாய் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மூத்த சகோதரி.இயக்குனர் எஸ் சங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. படத்தில் பாடி தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வெயில்’.

இப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானர் . அதன் பின்பு 2010 ஆண்டு வெளியான ‘மதராசப்பட்டினம்’ படத்திற்கு இசையமைத்து மக்கள் மத்தியில் மிகுந்தத வரவேற்பை பெற்றார் .இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன் ,ஆடுகளம், மயக்கம் என்ன, சகுனி ,பரதேசி, ராஜா ராணி, நிமிர்ந்து நில் ,இரும்புத்திரை, இது என்ன மயக்கம் ,விசாரணை, ருத்ரன், வாத்தி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
2008ஆம் ஆண்டு வெளியான குசேலன் என்ற படத்தில் நடத்து திரையுலகில் நடிகராக அறிமுகமானர் . அதை தொடர்ந்து நான் ராஜாவாகப் போகிறேன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கைபோன்று படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை.
2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இதைத்தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் போன்ற படங்களில் நடித்துள்ளார். சிங்க அரசர், 99 பாடல் போன்ற படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார்.
இவர் “ஜி.வி. பிரகாஷ் குமார் “என்ற பெயரில் ப்ரொடக்ஷன் கம்பெனியை தொடங்கினார்.
இவர் கம்பெனி தயாரிப்பில் வெளியான படம் ‘மதயானை கூட்டம்’. இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தனது பள்ளி தோழியான சைந்தவியை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சைந்தவி ஒரு பாடகி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது இவரின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.
