வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இன்றைய தினம் 250 பேருக்கு பீசிஆர் பரிசோதனைகம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இராசேந்திரகுளத்தில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 250 பேருக்கு இன்றையதினம் (08) காலை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் 14பேருக்கும், வேலங்குளம் விமானப்படை தளத்தில் இருவருக்கும் இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பெறப்பட்ட மாதிரிகள் யாழ் மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 135 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

hey