வட மாகாண குத்துச்சண்டை போட்டிகளில் வவுனியா மாவட்டத்திற்கு ஆறு தங்கம்முல்லைத்தீவில் இடம்பெற்ற வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் 06 தங்கம்  பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முல்லைத்தீவு விடியநாதா கல்லூரியில் 2020.10.02 ம் திகதி தொடக்கம் 05 திகதி வரை குத்துச்சண்டை போட்டிகள்  நடைபெற்றன.

இதில் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் கிளிநொச்சி, மன்னாரை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் வவுனியா மாவட்ட பெண் வீராங்கனைகள் 02 தங்கங்களும் ஆண் வீரர்கள் 04 தங்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட பெண் வீராங்கனைகள் 03 தங்கங்களும் ஆண் வீரர்கள் 03 தங்களையும் மன்னார் மாவட்ட பெண் வீராங்கனைகள் 01 தங்கங்களையும் ஆண் வீரர்கள் 02 தங்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனைக்கான சிறப்பு விருதினை வவுனியாவை சேர்ந்த தனுஷா 60 kg எடைப்பிரிவில் பெற்றுக்கொண்டார்.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வீர வீராங்கனைகளின் பயிற்றுவிப்பாளருமாகிய  நிக்சன் ரூபராஜ் மற்றும் M. M. சுரங்க அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்டம் 06 தங்கங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

hey