வவுனியாவில் அரசின் தடையுத்தரவினை மீறி திறக்கப்பட்ட வாகன விற்பனை நிலையம் பொலிஸாரால் மூடப்பட்டதுவவுனியாவில்

வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வாகன விற்பனையகம் வவுனியா பொலிஸாரின் உத்தரவிற்கமைய மூடப்பட்டது.

கோவிட் – 19 தொற்று காரணமாக நாடு முழுவதும் இம்மாதம் 31ம் திகதி வரை நிகழ்வுகள் , இசை நிகழ்ச்சிகள் , கண்காட்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று (08.10.2020) வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் மைதானத்தில் தனியார் நிதி நிறுவனத்தினால் வாகன விற்பனை சந்தையோன்று திறக்கப்பட்டிருந்தது .

அரசாங்கத்தின் தடையுத்தரவினை மீறி திறக்கப்பட்ட வாகன விற்பனையகம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர் மானவடு

பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவின் பேரில் அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் வாகன விற்பனையகத்தினை உடனடியாக மூடுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.அதனையடுத்து வாகன விற்பனையகம் மூடப்பட்டது.

hey