வவுனியாவில் மரகடத்தல் இராணுவத்தினரால் முறியடிப்பு : சாரதி தப்பியோட்டம்மரக்கடத்தல்…..

வவுனியா கல்மடுவில் நேற்று முன்தினம் (06.10.2020) இரவு ச ட்டவிரோ தமாக க ட த் த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று வவுனியா பூவரசங்குளம் பகுதியிலுள்ள இராணுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா கல்மடு பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமாக க டத்தப்படவிருந்த ஐந்து இலட்சம் பெறுமதியான 12 முதிரை மரக்குற்றிகளையும் பட்டா ரக வாகனத்தினையும் கை ப்பற்றியுள்ளனர்.

கை ப்பற்றப்பட்ட வாகனத்தையும், மரக்குற்றிகளையும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். க டத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் த ப்பியோடியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பூவரசங்குளம் பொலிஸார் தே டி வருவதாகவும் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey