செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் 112 சிறுவர்கள்வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 112 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் க.சிவகரன் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தாய், தந்தை ஆகியோரின் பராமரிப்பின்றி பிறருடைய பராமரிப்பில் வாழும் சிறுவர்களில் 112 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

இதனால் குறித்த சிறுவர்களை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அத்துடன், சிறுவர்களுக்கு தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey