தவறான இடங்களுக்குச் சென்ற கொரோனா தொற்றாளர்கள்! பாரிய பிரச்சினையாக உருவெடுப்புதவறான இடங்களுக்குச் சென்ற கொரோனா தொற்றாளர்கள்! பாரிய பிரச்சினையாக உருவெடுப்பு

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் பழகியவர்களை தேடும் நடவடிக்கையின் போது பலர் தவறான இடங்களுக்குச் சென்றிருப்பதால் உண்மையான தகவல்களை வழங்கத் தயங்குவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக மருத்துவரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பிரியந்த இலேபெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் பெண் ஊழியர், இந்த மருத்துவரின் தனியார் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், குறித்த மருத்துவரை தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இலங்கையில் முதன்முறையாக மருத்துவரொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey