வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இன்றிலிருந்து நாடு திரும்ப தடை?வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இன்றிலிருந்து நாடு திரும்ப தடை?

இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் பரவுகின்ற நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவது தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இன்று (07) நள்ளிரவு முதல் குறித்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏராளமான இலங்கையர்கள் இப்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தலுக்கான தேவையான இடத்தை அரசாங்கம் வழங்கும் என்று நம்பப்படுகிறது.

இதற்காக சமீபத்திய விமான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன

இதற்கிடையில் மேலும் 374 இலங்கையர்கள் இன்று காலை (07) காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்,

இந்த பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்ட உள்ளனர்.

hey