வவுனியாவில் ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் வழங்கும் எ ச்சரிக்கைவவுனியாவில்

நாட்டில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை இன்று வழங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய நிலையில் வவுனியாவிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் வகையிலான சுகாதார நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பேண வேண்டும் என இவ்வாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்களுடன் தனிமைப்படுத்தல் காலத்தில் நேரடி தொடர்புளை பேண வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

hey