இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்இலங்கையில்

மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் மக்கள் அநாவசிய பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டி ஆலோசணைகளை கடைபிடிப்பது கட்டாயமாகும் என்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மினுவாங்கொடை, திவுலபிட்டி மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட ‘ தனிமைபப்டுத்தல் ஊரடங்கு ‘ தொடர்ந்தும் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த மூன்று பொலிஸ் பிரிவுகளை தவிர ஏனைய இடங்களில் ஊரடங்கு அமுல் செய்யப்படுவது தொடர்பில் வரை எந்த தீர்மாங்களும் எடுக்கப்படவில்லை எனவும், அனைவரும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மினுவங்கொட கொரோனா தொற்றுக்கு அடிப்படையான முக்கிய ஆதாரத்தை அதிகாரிகள் இதுவரை அடையாளம் காணவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey