வவுனியாவில் ” குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்புக்கு துணை போவதா? வவுனியா நகர் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்வவுனியாவில்

குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்புக்கு துணை போவதா போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய சுவரேட்டிகள் வவுனியா நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரோட்டிகள் இன்று (05.10.2020) காலை தொடக்கம் வவுனியா நகர் , கண்டி வீதி , மன்னார் வீதி , நூலக வீதி , வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டு காணப்பட்டன.

நிலத்தடி நீருக்கும் நெல் உற்பத்திக்கும் ஆப்பு வைப்பதா அபிவிருத்தி? , இயற்கைச் சூழலை நாசப்படுத்தி களியாட்டங்கள் வேண்டுமா? , வவுனியா நகரசபையே வவுனியாக் குளத்தைக் கூறு போட்டு விற்காதே , நீர்ப்பாசனத் திணைக்களமே குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்புக்கு துணை போவதா போன்ற வாசகங்களை தாங்கிய சுவரோட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியாக் குளத்திற்கான மக்கள் செயலனி என சுவரோட்டியின் கிழே உரிமை கோரப்பட்டுள்ளது.

hey