இலங்கையில் மீளவும் கொரோனா -அரசாங்கம் அறிவித்துள்ள மூன்று முக்கிய விடயங்கள்ஸ்ரீலங்காவில் மீளவும் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அரசாங்கம் மூன்று முக்கிய விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இதன்படி அரசு பாடசாலைகள் மட்டுமல்ல அனைத்து தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றன.

திவுலப்பிட்டிய, மினுவாங்கொட மற்றும் வெயாங்கொட குதியில் வசிக்கும் அனைத்து துறைமுக அதிகாரசபை ஊழியர்களும் மேலதிக அறிவிப்பு வரும் வரை பணிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey