வவுனியாவில் தனிச்சிங்களத்தில் பதாதை ஊடக அமைச்சருக்காக இரண்டு மணி நேரம் ஊடகவியலாளர்கள் காத்திருப்புவவுனியாவில்

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகைதரவிருந்த அரசாங்க அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சரும் அவருடைய குழுவினருக்காகவும் வவுனியா , முல்லைத்தீவு , மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததுடன் அங்கு தனிச்சிங்களத்தில் அமைச்சரை வரவேற்கும் பதாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று காலை 10.30மணிக்கு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்கலவும் அவருடைய குழுவினரும், பிரதி அமைச்சர் ச.வியாழேந்திரன் ஆகியோர் வருகை தரவுள்ளதாக மாவட்ட செயலகத்தின் ஊடக அலுவலகத்தினால் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது எனினும் காலை 10.30 மணியளவில் இருந்து அமைச்சரையும் அவருடைய குழுவினரையும் எதிர்பார்த்து ஊடகவியலாளர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

மதியம் 12.30 மணியளவிலேயே அமைச்சர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

அத்துடன் மாவட்ட செயலகத்தில் அமைச்சரை வரவேற்கும் பதாதையில் தனிச்சிங்களத்தில் அமைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது .

இவ்வாறு தமிழ், சிங்கள் , முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு பகுதியில் தனிச்சிங்களத்தில் அரச நிகழ்வுகள் அண்மைய காலங்களாக இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

hey