வவுனியா ஒமந்தையில் 9முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைதுஓமந்தையில்

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் 9முதிரைமரக்குற்றிகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலமோட்டை காட்டுப்பகுதியில் சில நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறு கு ற்றத்த டுப்புபிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் அவர்களின் தலமையிலான பொலிஸார் காட்டுப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது பாலமோட்டை காட்டுப்பகுதியில் முதிரை மரம் வெட்டப்பட்டு 9 குற்றிகளாக காணப்பட்டுள்ளதுடன் அவற்றையும் கைப்பற்றியதுடன் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட 9 முதிரைக்குற்றிகளும் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ள பாலமோட்டை பகுதியினை சேர்ந்த 41வயதுடைய நபர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையின் பின்னர் முதிரைக்கு ற்றிகளையும் சந்தேகநபரையும் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey