வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் வாகன நெரிசல் : தடை விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவவுனியாவில்

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியூடாக பயணிக்கும் கனரக வாகனங்களுக்கு பொலிஸார் தடை விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தை சுற்றுவட்ட வீதி கடந்த காலங்களில் இருவழிபாதையாக காணப்பட்ட போதிலும் வாகன நெரிசல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.

எனினும் தற்போது குறித்த பாதையூடாக செல்லும் கனகர வாகங்கள் வீதியில் தரிந்து நின்று பொருட்களை ஏற்றுவது இறங்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் சந்தை சுற்றுவட்ட வீதியில் வாகன நேரிசல்கள் ஏற்படுகின்றன.

எனவே இப்பாதையூடாக கனரக வானங்கள் செல்வதற்கு பொலிஸார் தடை விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hey