வவுனியாவில் ‘புதிய மழை’ புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்வவுனியாவில்

கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார அதிகார சபையுடன் இணைந்து நடாத்திய ‘புதிய மழை’ புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இன்று (30.09.2020) காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை நடைபெற்றிருந்தது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன கலந்து கொண்டு புத்தக கண்காட்சி – விற்பனையகத்தினை நடா வெட்டி திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் எழுத்தாளரும் கவிஞருமான தமிழ்மணி மேழிக்குமரன் , வவுனியா மாவட்ட பிரதான மின் பொறியியலாளர் மைதிலி தயாபரன் , தமிழருவி சிவகுமார் உட்பட பொதுமக்கள் , கவிஞர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey