வவுனியாவில் நாளை ஹர்த்தாலா..? வெளியானது விபரம்ஹர்த்தாலுக்கு அழைப்பு..

வடக்கு கிழக்கில் ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளால் நாளை திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறும் என வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் உட்பட பல அமைப்புக்களை தொடர்பு கொண்டு வினவிய சமயத்தில்,

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் எம்மிடம் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை அதன் காரணமாக எமது முடிவினை வெளியிடமுடியல்லை.

அத்துடன் இதுவரையில் எமது முடிவின் பிரகாரம் வழமைபோன்று வவுனியாவின் செயற்பாடுகள் நடைபெறும் என மூன்றுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்களின் ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

hey