மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு வவுனியாவில் அஞ்சலிகள்கொ ரோனாவால் பா திக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் நேற்று (25.09.2020) பகல் 1 மணியளவில் ம ரணமடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று (26.09.2020) வவுனியாவில் பல்வேறு இடங்களில் அஞ்சலி பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக குருமன்காட்டுச்சந்தி , நகர முச்சக்கரவண்டி தரிப்பிடம் , சந்தை , வவுனியா நகர் போன்ற பகுதிகளில் பல்வேறு தரப்பினரினால் இவ் அஞ்சலி பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவரது உடல் இன்று மதியம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் போலீசார் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

hey