கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை! பரீட்சைத் திணைக்களம் அறிவிப்புஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் 06ம் திகதி நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்களுக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ம் திகதி நள்ளிரவு முதல் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து விதமான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளும் தடை செய்யப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

hey