வவுனியாவில் இன்று நண்பகலுக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக் கூடும்நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நண்பகல் 12 மணிக்குப் பின்னர் இடைக்கிடையே, மழை அல்லது இடி யுடன் கூடிய மழை பெய் யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதி ர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழைபெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

hey