வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தில் வெளிநாட்டு நேரமா..? கேலி செய்யும் வவுனியா நகர் மக்கள்வவுனியாவில்

வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அ சௌகரியங்களுக்கு உள்ளகின்றனர்.

குறிப்பாக காலை இலங்கை நேரப்படி 09.20 நிமிடமாக காணப்படும் போது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தின் நேரமானது இரு பக்கங்களில் 11.12 மற்றும் 12.10 நிமிடமாக ஆக காணப்படுகின்றது. மேலும் இரு பக்கங்களில் உள்ள மணிக்கூடுகள் இயங்கவில்லை

நகரத்துக்கு மத்தியில் அதாவது பொதுச்சந்தை , வங்கிகள் , வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிக்கு செல்லும் பாதையில் காணப்படுகின்ற இம்மணிக்கூட்டு கோபுரமே பிழையான நேரத்தை காட்டுவதாகும்.

பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் நகர சபையினர் ஏன் இவ்விடயத்தில் அக்கறையின்றி செயற்படுகின்றனர் எனவும் இது ஆசியாவின் அதிசயம் என்று கூட கேளி செய்யும் வகையில நகரசபை அச மந்தபோக்காகவுள்ளதாக பொதுமக்கள் வி சனம் தெரிவிக்கின்றனர்.

hey