வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிற்கு இடமாற்றம்சேவை தேவை காரணமாக 27 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போ தைப்பொ ருள் பணியகத்தின் பொறுப்பான உப பொலிஸ்மா அதிபர் உட்பட 11 உப பொலிஸ்மா அதிபர்கள், 11 பொலிஸ் அத்தியட்சகர்கள், இரு பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உப பொலிஸ் அத்தியேட்சகர் ஒருவருமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய தம்மிக்க பிரியந்த அவர்களுக்கும் இன்றையதினம் (20.09.2020) களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் 2020 ஜனவரி மாதம் 3ம் திகதி வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையினை பொருப்பேற்ற தம்மிக்க பிரியந்த அவர்கள் வவுனியா , மன்னார் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey