காணி ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல் : விரைவாக விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்!நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவுக்கான ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

எமது பகுதிகளில் பாரியளவு காணிப் பிரச்சினை இருக்கின்றது. வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளே அதிகமாகவுள்ளன.

அத்துடன் பல வருடங்களாக இருக்கின்றவர்களுக்கு அக் காணிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறான பி ரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவே ஜனாதிபதி செழிப்பின் பார்வை என்ற செயற்றிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகள் கட்டியிருந்தாலும் சரி விவசாய காணிகள் மற்றும் தோட்டக்காணிகளானாலும் சரி மக்களின் பாவனையில் நீண் டகாலமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பபடிவங்களை எமது அலுவலகத்திலும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளதுடன் காணி ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

hey