மேன்முறையீடு செய்த பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 2 வாரங்களுக்குள் தீர்வு50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுடைய மேன்முறையீடுகளை 2 வாரங்களுக்குள் பரிசீலனை செய்யவுள்ளதாக அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தொிவித்துள்ளார்.

பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டத்தில் நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அந்த மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக அரச ​சேவை,

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.அரச சேவையின் பதவி வெற்றிடங்களுக்கு உள்வாங்கப்படவுள்ள பட்டதாரிகள் 50 ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேன்முறையீடுகளை ஆராய்ந்ததன் பின்னர்

மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவை பதவிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey