வவுனியா வெடுக்குநாறி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை நடத்த தடை?வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை நடத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் நெடுக்கேணி பொலிஸார் ஊடாக த டை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழ் மக்களின் தொன்மை வரலாறு கொண்ட நெடுங்கேணி, வெடுக்குநா றி மலை ஆதி சிவன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பமாக இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை ஆலய நிர்வாகத்தினரை நெடுக்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

அங்கு சென்ற ஆலய நிர்வாகத்தினரிடம் தொல்பொருட் திணைக்களம் வருடாந்த உற்சவம் நடத்த அனுமதி மறுத்து தமக்கு கடிதம் வழங்கியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் இன்று நீதிமன்றம் வருமாறு பணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொல்பொருட் திணைக்களத்தின் குறித்த செயற்பாடு ஆலய பக்தர்களிடையை கடும் அ திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் கருத்துத் தெரிவிக்கையில், வெ டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றன.

இந்த நிலையில் ஆலய திருவிழாவினை தடு த்து நிறுத்தக் கோரி தொ ல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை நேற்றுமாலை அழைத்த பொலிஸார் தொ ல்லியல் திணைக்களம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை கா ண்பித்தனர்.

அது முற்றுமுழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. அதில் முழுமையாக என்ன எ ழுதப்பட்டிருக்கின்றது என்று தெரியவில்லை.

குறித்த கடிதத்தை காண்பித்த பொ லிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும் அது தொல்லியலுக்குரிய இடம் அங்கு செல்வதோ, திருவிழா செய்வதோ த டை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வ ழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கின்றது.

எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தோம்.

இதனை ஏற்க மறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொ ல்லியல் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் இன்று நீதிமன்றிற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

hey