வவுனியா காணிக்கிளைக்கு உத்தியோகத்தர்கள் ப ற்றாக்கு றை : வவுனியா பிரதேச செயலாளர்வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக்கிளையில் உத்தியோகத்தர்கள் பற் றாக்கு றை இருப்பதனால் காணி தொடர்பான விடயங்களை தீர்ப்பதில் சிக் கல்கள் இருப்பதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணிக்கான உறுதிபத்திரங்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் சந்திக்கும் பி ரச்சனைகள் தொடர்பாக வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது மக்கள் பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போதே பிரதேச செயலாளர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது பிரதேச செயலகத்தின் காணிக்கிளையில் இரண்டு குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 2 எப்.ஐ. ஆகியோரே கடமை வகிக்கின்றனர்.

காணி உத்தியோகத்தர் (Lo) பதவியானது வெற்றிடமாக காணப்படுகின்றது. எனவே அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தர்கள் இன்மையால் சில சி க்கல் நிலமைகள் ஏற்பட்டுள்ளது. காணிக்கிளையில் மாத்திரமே இவ்வாறான வெற்றிடங்கள் இருக்கின்றது.

எனவே ஆளணி விடயங்கள் தொடர்பாக மாகாண காணி ஆணையாளருக்கு நான் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைத்தலைவர்கள் இந்த வெற்றிடத்தை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் திலீபனால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

hey