நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண் டலவியல் திணைக்களம் எ திர்வுகூறியுள்ளது.

மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு ,வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை காற்று வீ சக்கூடும் எனவும் எ திர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கட ற்பி ராந்தியங்கள் இடைக்கிடையே கொ ந்த ளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதி ர்வுகூறியுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில், அலை 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் எ ச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

hey