வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்களால்  மாபெரும் புத்தகம் சேகரிக்கும் நிகழ்வுயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் IEEE Student Branch Vavuniya Campus of the University of Jaffna இனால் ஒழுக்கு செய்யப்பட்ட மாபெரும் புத்தக சேகரிப்பு நிகழ்வு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இச் செயற்பாடு வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களில் நூலகங்களை நிறுவும் நோக்கத்துடன் நடாத்தப்படுகின்றது

வவுனியா வாழ் மக்களிடம் உள்ள பயன்படும் நிலையில் உள்ள புத்தகங்களை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

புத்தகங்களை வழங்க விரும்புவோர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் கையளிக்கலாம்

   >>வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம்
   >>வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகம்
   >>குருமன்காடு பல்கலைக்கழக வளாகம்
>>பம்பைமடு பல்கலைக்கழக வளாகம்

மேலதிக விபரங்களுக்கு 0779446151

இவ் இடங்களில் வவுனியா மக்கள் புத்தகங்களை வழங்கலாம் என நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

hey