அரச காணிகளில் குடியிருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி..! அதி சிறப்பு வர்த்தமானி வெளியானது, தவறாது விண்ணப்பியுங்கள்அரசுக்கு சொந்தமான காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு அந்த காணிகளை பகிர்ந்தளித்து சட்டரீதியான ஆவணங்களை வழங்குவதற்கான அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

கொழும்பு, ஹம்பகா தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும்

வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய
அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான காணிக் கச்சேரி
2020.11.01 ஆம் திகதியில் இருந்து 2020.11.21ஆம் திகதிக்கிடையில் இயைபுடைய பிரதேச செயலாளர் தீர்மானிக்கின்ற திகதியில் நடத்தப்படும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சமூக மட்டத்தில் செயற்பட்டுவரும் பொது நிறுவனங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடைய மக்களை அறிவூட்டுவது பயனளிப்பதாக அமையும்.

hey