O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சி றுமி! பி ரமிக்கும் பாடசாலை ஆ சிரியர்கள்



இலங்கையில் 9 வயதுடைய சி றுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார்.

பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சி றுமியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் திம்புலாகல அரலங்வில, விலயாய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

தான் 6ஆம் வகுப்பு கற்ற போதிலும், தன்னால் சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற கூடிய திறன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களம், ஆங்கிலம் மற்றும் கணிதம் மட்டுமல்லாமல் வி லங்கியல் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற லேஹன்ஸா ஆவர்த்தன அட்டவணையை சில நொ டிகளில் படித்து பாடசாலை அதிபர் உட்பட அனைவரையும் ஆ ச்சரியத்தில் ஆ ழ்த்தியுள்ளார்.

செனுலி தனது முதல் ஆண்டில் இருந்தபோதும் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார் என்று அவரது பெற்றோர் கூறுகிறார்கள்.

சிங்கள மொழில் கற்கும் அவர் ஆங்கிலத்தில் இருந்தளவு திறமையை காட்டியது ஆ ச்சரியமாக இருந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணித பாடத்தில் விசேட திறமையை காட்டும் அவர் நம்பமுடியாத அளவிற்கு பில்லியன்களையும் டிரில்லியன்களையும் கணக்கிடுவார் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

“எனக்கு 6ஆம் வகுப்பிலேயே சாதாரண தர பரீட்சை எழுத வேண்டும். அனைத்து பாடத்தில் ஏ சித்தி பெற முடியும். எனக்கு கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் உட்பட பல விடயங்களை செய்ய முடியும். எனக்கு உதவி செய்த ஒருவர் இருந்தால் என்னால் இலங்கைக்காக பல்வேறு வெற்றிகளை பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey