55 வயது பக்கத்து வீட்டு பெண்ணை உஷார் செய்த முதியவர்.. திருமணத்திற்கு வாழ்த்துகூறிய 12 பேரப்பிள்ளைகள்! எப்படி கரெக்ட் பண்ணி இருக்காரு பாருங்க.!முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பக்கத்து பெட்டில் இருந்த 55 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், அசோக்நகர் மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் உம்ராவ் சிங்(70) என்ற முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இதையடுத்து, அவரது படுக்கைக்கு அருகே குடி பாய் என்ற 55 வயது பெண்ணும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரின் படுக்கைகளும் அருகருகே இருந்ததால் இருவரும் மருத்துவமனையில் உரையாடிக் கொண்டே இருந்துள்ளனர்.

இதன்பின்னர், மூன்று நாட்களில் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். சிகிச்சை முடிந்தபின் உம்ராவ் தனது கிராமத்திற்கு குடி பாயை அழைத்துச் சென்று இருக்கின்றார்.அங்கு இருக்கும் தனது நான்கு மகன்கள் மற்றும் 12 பேரக்குழந்தைகளுடன் உரையாடிவிட்டு பின்னர் தங்களது காதல் குறித்து கூறியுள்ளார்.

அவர்களிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்கி இருக்கின்றார். அதன் பின்னர் கிராம மக்கள் முன்பாக புதிய ஆடைகளை உடுத்தி மேளதாளத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

hey