வவுனியா – செட்டிகுள வைத்தியசாலை தொடர்பில் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலீபன்செட்டிகுளத்தில்

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு வைத்தியர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

வவுனியா – செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றா க்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆ ர்ப்பாட்டம் ஒன்று கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் த ற்காலிகமாக இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இன்று கடமையை பொறுப்பேற்று கொண்டனர்.

கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மக்களுடன் கலந்துரையாடியதுடன், வைத்தியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அந்த போ ராட்டம் கைவிடப்பட்டது.

அதற்கமைய தான் உறுதி வழங்கியதை போன்று, குறித்த நியமனத்தை ஒரு கிழமைக்குள் பெற்றுக்கொடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார்.

hey