வவுனியா நெளுக்குளத்தில் லொறியுடன் 14 எருமை மாடுகளை கைப்பற்றிய பொலிஸார்நெளுக்குளத்தில்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட நெளுக்குளம் பகுதியில் 14 எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறியினை இன்று (05.09.2020) மாலை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி அனுமதிப்பத்திரமின்றி எருமை மாடுகளை ஏற்றி வருவதாக வவுனியா மாவட்ட போ தைப்பொ ருள் ஒ ழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இ ரகசிய தகவலையடுத்து குறித்த பிரிவினர் குறித்த லொறியினை மடக்கி பிடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது குறித்த லொறியினை நெளுக்குளம் பகுதியில் வைத்து ம டக்கி பி டித்த வவுனியா மாவட்ட போ தைப்பொ ருள் ஒ ழிப்பு பிரிவினர் அனுமதிப்பத்திரமின்றி எருமை மாடுகளை எற்றிச் சென்ற லொறியினை பொலிஸார் கையப்படுத்தியதுடன் லொறியின் சாரதி மற்றும் நடத்துனரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் வவுனியா புளித்தரித்தபுளியங்குளம் பகுதியினை சேர்ந்தவர்களாவார்கள். கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

hey