வவுனியாவில் 383 பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்புவவுனியாவில்

ஐனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்டுள்ள 50000 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (02.09) நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (02.09.2020) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றன.

வவுனியா வடக்கில் 32 பட்டதாரிகளும் , வவுனியா தெற்கில் 20 பட்டதாரிகளும் வெங்கள

செட்டிக்குளம் பிரிவில் 28 பட்டதாரிகளும் வவுனியா நகரில் 303 பட்டதாரிகளும் மொத்தமாக 383 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளனர்.

அவர்களுக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கும் இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் தி. தினேஷ்குமார் ,

வன்னி பிராந்திய கட்டளைத்தளபதிகள் , வவுனியா நான்கு பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள் , மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் 256 பட்டதாரிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

hey