வவுனியாவில் தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!வவுனியாவில்

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 40ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலையடியில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இந்நினைவு தின நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது, அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தமிழருவி அவர்களின் நினைவுபேருரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வு வவுனியா நகரசபையின் உப தலைவர் சு. குமாரசாமி தலைமையில் இடம்பெற்றதுடன், தமிழருவி த. சிவகுமாரன், நகரசபை உறுப்பினர்களான

சந்திரகுலசிங்கம், நா. சேனாதிராஜா, க.சுமந்திரன், சு.காண்டீபன், த.மஞ்சுளா மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey