வவுனியாவில் ஏறும் பயணிகளிடம் அதிக பணம் அறவீடு : சொகுசு பேருந்து தொடர்பில் தொடரும் மு றைப்பாடுயாழ்ப்பாணம் – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பேருந்துகளில் உரிய கட்டணம் அ றவிடப்படுதில்லை என கு ற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பேருந்துகள், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா போன்ற இடங்களில் ஏறும் பணிகளிடம், தமக்கு விருப்பமான தொகை பணத்தை அற விடுவதாகவும், சிலர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் தொகையை அ றவிடுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துகளிலும், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா போன்ற இடங்களுக்கு செல்கின்ற பயணிகளிடம் தமக்கு விருப்பமான தொகை பணத்தை அறவிடப்படுவதாகவும், சிலர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தொகையை அறவிடுவதாகவும் மக்கள் வி சனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகளில், கட்டண விபரம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும், அதிசொகுசு பேருந்துகளில் அவ்வாறு காட்சிப்படுதப்படுவதில்லை என மக்கள் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு போக்குவரத்து துறை அமைச்சின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கமைய, இந்த விடயத்தை போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பேருந்துகள் பல, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி இன்றியும் சேவையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

அவ்வாறு அனுமதியின்றி செயற்படும் பேருந்துகள், கொழும்பு technical சந்தி, மருதானை மற்றும் கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வடக்கு நோக்கி சேவைகளை முன்னெடுப்பதாகவும் அவர் சு ட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், குறித்த விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

hey