மாணவர்களுக்கு ஒரு கப் பாலுக்கு பதிலாக ஒரு கப் பாரம்பரிய அரிசிக் கஞ்சிபாடசாலை மாணவர்களுக்கு ஒரு கப் பாலுக்கு பதிலாக ஒரு கப் பாரம்பரிய அரிசிக் கஞ்சி வழங்குவதில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டில் போதுமான அளவு பால் உற்பத்தி இல்லாமையினாலும் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு தீர்வாக இந்த திட்டத்தைச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.இது தொடர்பாக ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க அமைச்சர் முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

hey