வவுனியாவில் அரச நிறுவன பெயர்ப்பலகையில் தமிழ் மொழி மழுங்கடிப்புவவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள அரச சார்பு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபை வவுனியா கைத்தொழில் பேட்டைக்கு, வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள குறிகாட்டி

பெயர்ப்பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதையும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் பொதுமக்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம் ஒன்றில் இவ்வாறு பல இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் விளம்பரம் மற்றும் பெயர்ப்பலகையில் தனிச்சிங்கள மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றமையும் இவ்வாறு தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை

என்பதையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உரிமைகளைப்பயன்படுத்தி தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறையினை அமுல்ப்படுத்த தமது சிறப்புரிமையை பயன்படுத்துமாறு பொதுமக்களினால் வேண்டுகோள் வி டுக்கப்பட்டுள்ளது.

hey