வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணி உரிமை மற்றும் உரிமம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட பிணக்காளர்களுடன் கலந்துரையாடி தீர்வு காணும் செயற்பாட்டை வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை முன்னெடுத்து வருகின்றது.

கொ விட்-19 அ ச்சம் காரணமாக விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொவிட் – 19 அச்சுறுத்தல் குறைவடைந்துள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி விசேட காணி மத்தியஸ்தர் சபை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன் படி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் நடைபெறும்.

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நன்மை கருதி மாதத்தில் ஒன்று விட்ட இரண்டு சனிக்கிழமைகளில் செட்டிகுளம் பிரதேரச செயலகத்திலும், வவுனியா வடக்கு மக்களின் நன்மை கருதி மாதத்தில் ஒன்று விட்ட இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் புளியங்குளம் இராமனூர் வித்தியாலயத்திலும் விசேட காணி மத்தியஸ்தர் சபை நடைபெறும்.

எதிர்வரும் 29 ஆம் திகதி செட்டிகுளம் பிரதேச செயலகம், 30 ஆம் திகதி இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, எதிர்வரும் 6 ஆம் திகதி புளியங்குளம் இராமனூர் பாடசாலையிலும் விசேட காணி மத்தியஸ்தர் சபையின் காணிப் பிணக்குகள் தொடர்பான விசாரணைகள் நடைபெறும். அத்துடன் புதிய முறைப்பாடுகளும் இத் தினங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

hey