இலங்கையில் புதியதாக அடையாளம் காணப்பட்ட 2600 இடங்கள்!இலங்கையில் சுற்றுலா துறைக்காக இதுவரையில் பயன்படுத்தாததும் சுற்றுலா ஈர்ப்பை பெற கூடிய 2600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதனை விரைவில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் சந்தர்ப்பத்தில் இந்த 2600 இடங்ளை சுற்றுலா பயணிகளுக்கு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஓரே நேரத்தில் அதிக சுற்றுலா பயணிகளை அழைத்து வர கூடிய வகையில் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உள்ள வேறு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

hey