வவுனியாவில் இடம்பெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் தலைமையில் குருமன்காடு பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெறும் என தெரியவருகிறது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய குழு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில் முக்கிய விடயங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமிப்பு தொடர்பில் ஆராய்தல், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதையில் முன்நோக்கிச் செல்வதற்கான வழிவகைகளை ஆராய்தல்,

தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும், பின்னருமான காலங்களில் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும், உறுப்பினர்களுக்கும் எதிரான பிரச்சாரங்களும் செயற்பாடுகளும் பற்றி ஆராய்தல், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு எற்பட்ட பின்னடைவு தொடர்பில்

ஆராய்வதற்கான சுயாதீன குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஆராய்தல், தேர்தல் காலத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்தல் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

hey