இலங்கையில் பல்வேறு சி றைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 5 வயதிற்குட்பட்ட 46 குழந்தைகளை விடுவிக்குமாறு பிரதமர் அதிரடி உத்தரவு..!சி றைச்சாலை

இலங்கையில் உள்ள பல்வேறு சி றைச்சாலைகளில் தாய்மாருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள 5 வயதுக்குட்பட்ட 46 குழங்தைகளையும் சி றைச்சாலையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவினை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ளார். 5 வயதிற்கு உட்பட்ட 46 குழந்தைகள் தற்போது நாடு முழுவதும் உள்ள சி றைகளில் தங்கள் தாய்மார்களின் பராமரிப்பில் உள்ளனர்
என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சி றைச்சாலையில் பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் பல்வேறு கு ற்றங்களுக்காக சி றையில் அ டைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் பராமரிப்பில்
உள்ள சிறு குழந்தைகள் பற்றிய ஊடக அறிக்கையில் ராஜபக்ஷவின் கவனத்தை ஈர்த்தது.

இதனை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குழந்தைகள் குறித்த தகவல்களைத் தேடியதுடன்,
குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சி றைச்சாலை சீ ர்திருத்தங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
பிரதமரின் ஊடக பிரிவுக்கு குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை விடுவிப்பதற்கான செயன்முறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சி றைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

hey