நாடாளவிய ரீதியில் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலை மாணவர்களை வழமையை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய முதலாம் திகதி முதல் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரம் இனிமேல் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதங்கள் அனைத்தும் மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி இயக்குனர்களுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொ ரோனா வை ரஸ் காரணமாக செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அன்றைய தினம் முதல் செயற்படுத்தப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகாலத்தில் சில பாடசாலைகளில் பிற்பகல் 3.30 மணி வரை பாடவிதானங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey