வவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கை துவவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய கு ற்றத்த டுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக கடைகளை உ டைத்து திருட்டில் ஈடுபட்ட கு ற்றச்சா ட்டில் முக்கிய நபர் ஒருவரும், மேலும் பல திருட்டு சம்பங்களுடன் தொடர்புடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் வவுனியாவின் நெளுக்குளம், குருமன்காடு, குளுமாட்டுச்சந்தி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை உ டைத்து தி ருட்டில் ஈடுபட்ட நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து தொலைபேசி அட்டைகள், மூன்று தொலைபேசிகள், சிம்காட், பவர்பாங், வங்கி புத்தகம், ஏரிஎம் அட்டை உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்த வவுனியா – கூமாங்குளத்தில் தற்காலிகமாக வசித்துவரும் நபர் ஒருவரே கை து செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சமயபுரம் பகுதியில் நெல் அரைக்கும் ஆலை ஒன்றில் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு மோட்டர்களை திருடிய கு ற்றச்சாட்டு மற்றும் காத்தார்சின்னக்குளம், ஆச்சிபுரம் பகுதிகளில் ஆடுகளை தி ருடிய கு ற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இருவர் நேற்று கை து செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டர்களும், மூன்று ஆடுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை வி சாரணைகளின் பின்னர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

hey