வவுனியாவில் ஆண் ஒருவரின் ச டலம் கண்டெடுப்பு : பொலிஸார் தீ விர வி சாரணைவவுனியா- பறயனாலங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகாமையில், அடையாளம் தெரியாத ஒருவரின் ச டலம் இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பறயனாலங்குளம் வீதிக்கரையில் இருந்த சிறிய கொட்டில் ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் ச டலம் இருப்பதினை அவதானித்த பொலிஸார், ச டலத்தினை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மேலும், மீ ட்கப்பட்ட நபரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் ச டலத்தினை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், அப்பகுதிகளை சேர்நத கிராமசேவகர்களை அழைத்து ச டலத்தினை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்தநபர் பேருந்தில் வருகைதந்து அப்பகுதியில் இறங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey