கைகளாலும் கணினியாலும் மக்களை ரசிக்க வைக்கும் வவுனியா கலைஞர் : இணையத்தில் குவியும் பாராட்டுகள்வவனியா கலைஞன்

நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன.சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து அடையாளங்களையும் பெற்று விடுகின்றனர். அந்தவகையில் எனது பார்வையில் சிக்கிய வவுனியாவை சேர்ந்த கோணேஸ்வரன் கோவிந்தன் எனும் கலைஞரின் திறமையினை வெளிச்சப்படுத்துவதில் நாம் மகிழ்வடைகின்றோம்

யாழில் பிறந்து வவுனியாவில் வளர்ந்து தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருகிறார் இவர் தனது சிறுவயதில் இருந்தே வரைதலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்

இவர் தனது சிறுவயதில் இருந்தே பல திறமைகளை உடையவர் இவர்  எதேனும் ஓர் படத்தினையோ அல்லது ஒருவரையோ பார்த்து அவ்வாறே வரையும்  திறமையும் அத்துடன் கணினி மூலம் டிஜிட்டல் முறையில் தற்போது வரைந்து மக்களை மகிழ்வித்து  வருகின்றார்

இவர் தற்போது வெளிநாடு ஒன்றில் தனது திறமையினை மட்டும் மூலதனமாக கொண்டு தனது அசாத்தியமான திறமையினால்  கைகளினாலும் கணினி மூலமாகவும் டிஜிட்டல் முறையில் படங்கள் வரைந்து வருகின்றார்

இவர் பழைய புகைப்படங்கள் மற்றும் சேதமாகி மங்கிய புகைப்படங்களை தத்துருவமான முறையில் வரையும் ஆளுமையும் உடையவராவார்.

இவரது அசாத்தியமான திறமையினை சுவிஸ் நாட்டு ஊடகங்களில் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளது இவரது சாதனைகள் மூலம்  வவுனியா மண்ணின் பெருமையினை வெளிநாடு வரை கொண்டு சேர்த்துள்ளார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்

இவரின் திறமை வெளிச்சத்துக்கு வந்து இவரது கலைப்பயணம் மெம்மேலும் சிறப்படைய வன்னி பிபிசி செய்தித்தளம் வாழ்த்துகிறது. இவரின் கைவண்ணத்தால் உருவாகிய சில படைப்புக்களை உங்கள் பார்வைக்காக.

இவரை வாழ்த்த விரும்பினாலோ அல்லது
இதுபோல் உங்களின் பிள்ளைகளின், அன்புக்குரியவர்களின் உருவப்படங்களைப் பரிசளிக்க விரும்பினால் தொடர்புகொள்ள லிங்கை கிளிக் இந்த செய்யவும்

hey