கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்புதொலைபேசி

தாம் பயன்படுத்தும் செல்போன்கள் செல்லுப்படியான அனுமதிப் பத்திரத்தை கொண்டு விற்பனை முகவரால் இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, கைத்தொலைபேசிகளை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் IMEI என்ற தட்டச்சு செய்து, 15 இலக்கங்களை கொண்ட தமது கைத்தொலைபேசிகளில் இருக்கும் IMEI இலக்கத்தை 1909 என்ற இலக்கத்திற்கு குறுஞ் செய்தியில் அனுப்புமாறும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய பின்னர், அந்த கைத்தொலைபேசி ச ட்டரீ தியாக இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது பதிவு செய்யப்படாததா என்ற பதில் செய்தி அனுப்பி வைக்கப்படும்.

பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசிகள் இருக்குமாயின் அது குறித்து தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கமும் குறுஞ்செய்தியில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசிகளை எதிர்காலத்தில் செ யலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

hey