வவுனியாவில் வீதியில் சென்ற துவிச்சக்கரவண்டிகளை ம டக்கி பி டித்த நகரசபையினர்வவுனியாவில்

துவிச்சரவண்டிகளை மட க்கி பி டித்த நகரசபையினர்

வவுனியா நகரசபை வளாகத்தில் இன்றையதினம் (17.08.2020) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணிவரை நகரசபையினரினால் துவிச்சக்கரவண்டிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

நூலக வீதி , பூங்கா வீதி , நகரசபை வீதியுடாக பயணித்த துவிச்சகரவண்டிகளை நகரசபையினர் வழிமறித்து துவிச்சரவண்டிகளுக்குக்காக உரிமத்தினை 15ரூபா கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

உரிமை பத்திரத்தில் துவிச்சக்கரவண்டியின் வகை , துவிச்சக்கரவண்டியின் அளவு , துவிச்சக்கரவண்டியின் இலக்கம் என்பன பதியப்பட்டதுடன் அதன் பின்னர் துவிச்சகரவண்டிகளின் பொருத்துமாறு இலக்கத்தகடும் வழங்கி வைக்கப்பட்டன.

குறிப்பாக இன்றையதினம் 50க்கு மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகளுக்கு உரிமம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

hey