தேர் ஏறி வந்த நல்லூரான்!! -வடம்பிடிக்க அலைபோல் திரண்ட பக்தர்கள்-நல்லூர்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்தள் அணிதிரண்டு முருக பெருமானின் தேரை வடம் பிடித்து இழுத்துள்ளனர்.

நல்லூர் தேர் திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையில் வழமையாக காலை 7 மணிக்கு நடைபெறும் தேர் திருவிழா இம்முறை 5 மணியளவில் நடைபெற்றிருந்தது.

இருப்பினும் பெரும் தொகையான பக்தர்கள் அதிகாலை வேளையிலேயே ஆலயகத்தில் மையம் கொண்டு முருகப் பெருமானின் தேரை வடம்பிடித்து இழுத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

hey