இரட்டை சகோதரர்களை மணந்த இரட்டை சகோதரிகள்: அபூர்வ ஜோடி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!அமெரிக்க இரட்டையர்களான சகோதரிகள் இருவர், இரட்டையர்களை மணமுடித்துள்ள நிலையில், தாங்கள் இருவருமே ஒரே நேரத்தில் கர்ப்பமுற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் விர்ஜினியாவைச் சேர்ந்த இரட்டையர்களாகிய Brittany மற்றும் Briana Deane (33) சகோதரிகள், இரட்டையர்களாகிய Josh மற்றும் Jeremy Salyers (35) சகோதரர்களை ஒரே நாளில், ஒரே போல் உடையணிந்து ஒரே நேரத்தில் மணந்துகொண்டார்கள்.

தற்போது, இரண்டு பெண்களுமே ஒரே நேரத்தில் தாங்கள் கர்ப்பமுற்றுள்ளதை அறிந்து த்ரில் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் ஒரே வீட்டில் வாழும் அனைவரும் சேர்ந்து அனைத்து குழந்தைகளையும் வளர்க்க இருப்பதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்கள் இரண்டு ஜோடிகளும்.

எங்கள் வாழ்வில், பிறந்தநாள், ஓட்டுநர் உரிமம் பெறுவது, பட்டம் பெறுவது ஏன் திருமணம் என அனைத்தும் ஒரே நேரத்தில்தான் நிகழ்ந்தது என்று கூறும் அவர்கள், ஒரே நேரத்தில் கர்ப்பமுற்றது தங்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

எல்லாம் போக, சமீபத்தில் இரண்டு ஜோடிகளும் ஒரே மாதிரி மாஸ்குகளையும் வாங்கியிருக்கிறார்களாம், பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில், ஆண்களுக்கு பச்சை நிறத்தில்!

hey